\
மழை
மழைPT web

3 மாவட்டங்களுக்கு மிக கனமழை.. 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கும் 14 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on: 

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 15 ஆம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கோவை, நீலகிரி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், நாமக்கல், கரூர், ராமநாதபுரம் மற்றும் மதுரையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com