\
மழை
மழைpt web

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; நாளைக்கு எப்படி? வானிலை மையம் சொல்வதென்ன?

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Published on: 

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களிலும், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா நகரில் 1 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை
அண்ணா நகரில் 1 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை

சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி தினமான நாளை திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com