பாலச்சந்திரன்
பாலச்சந்திரன்pt web

80-90 கி.மீ வேகத்தில் காற்று! கரையைக் கடக்கும்போது புயல் எப்படி இருக்கும்?-பாலச்சந்திரன் சொல்வதென்ன?

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் ஒரு சில நேரத்தில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Published on

ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை பிற்பகல் புயல் கரையை கடக்கும்
நாளை பிற்பகல் புயல் கரையை கடக்கும்

29-11-2024 அன்று வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் (நாகபட்டினம். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், மாவட்டங்கள்) புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

பாலச்சந்திரன்
தந்தை காலமானது குறித்து நடிகை சமந்தா உருக்கமானப் பதிவு!

நாளை கரையைக் கடக்கும் புயல்

நாளை பிற்பகல் புயல் கரையை கடக்கும்
நாளை பிற்பகல் புயல் கரையை கடக்கும்

30-11-2024 அன்று வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com