கனமழை கணிப்புமுகநூல்
தமிழ்நாடு
Rain Alert | சேலம், நாமக்கல் உட்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை.. வானிலை ஆய்வு மையம் கணிப்பு!
சேலம், நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் கிழக்கு திசை வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களின் நேற்று மழை பெய்தது. இந்த நிலையில், இன்று சேலம், நாமக்கல், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைகோப்புப்படம்
மேலும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

