திமுக MLA-வின் கல்குவாரியில் சட்டவிரோத பணிகள்! புதிய தலைமுறையின் கள ஆய்வில் அம்பலம்!

கரூர் மாவட்டம் சிவாயம் கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டுள்ளது புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பழனியாண்டிக்கு சொந்தமான மூன்று கல்குவாரிகள் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சிவாயம் வடக்கு கிராமத்தில் உள்ளன. ஒன்று அவரது பெயரிலும், இன்னொன்று மணி என்ற அவரிடம் பணிபுரிவர் பெயரிலும், மூன்றாவது குவாரி மதிவாணன் என்பவரின் பெயரிலும் உள்ளன.

இந்நிலையில் இந்த கல்குவாரிகளில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் எடுக்கப்படுவதாக ஏற்கனவே வழக்கு தொடர்ந்து, அது நிரூபிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் அதெல்லாம் பொருட்படுத்தாத பழனியாண்டி தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி தொடர்ந்து சட்டவிரோதமாக கனிமவள கொள்ளையில் ஈடுபட்டுவந்துள்ளார். அது தற்போது புதியதலைமுறை கள ஆய்வில் ஆதாரம் அம்பலமாகியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com