இளையராஜா சாமி தரிசனம்pt desk
தமிழ்நாடு
திருவாரூர்: ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயத்தில் இளையராஜா சாமி தரிசனம்
சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.
செய்தியாளர்: மாதவன்
திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம், கோயில் கட்டப்பட்டதற்கான எவ்வித ஆதாரம் இன்றி காணும் மிக தொன்மை வாய்ந்ததும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் போற்றப்படுகிறது. பல்வேறு புராதன சிறப்புகளைக் கொண்ட இந்த ஆலயத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா வருகை புரிந்தார்.
இளையராஜா சாமி தரிசனம்pt desk
இதையடுத்து ஆலயத்தின் மூலவர் ஸ்ரீவன்மீகநாதர், பிரதான மூர்த்தியான ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ நவக்கிரக சன்னதி, ஸ்ரீ ரௌத்திர துர்க்கை, ஸ்ரீ கமலாம்பாள் அம்மன் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். அப்போது ஆலயத்தின் சிறப்பு குறித்தும், ஒவ்வொரு சாமி சன்னதிகளின் ஐதீக வழிபாடு குறித்தும் இளையராஜாவிடம் சிவாச்சாரியார்கள் விளக்கினர்.