இளையராஜா
இளையராஜாமுகநூல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான இளையராஜா!

இந்தநிலையில், இவ்வழக்கின் விசாரணை நிதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நடைபெற்றது.
Published on

பாடல்கள் உரிமம் தொடர்பாக மியூஸ்சிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கில், இளையராஜா ( 13.2.2025) நேரில் ஆஜரானார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மியூசில் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாடல்கள் உரிமம் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தது . அதில், கடந்த 1997 ஆம் ஆண்டு இளையராஜாவின் மனைவி பெயரில் உள்ள இசை நிறுவனத்துடன் மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, தேவர் மகன், பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையை மியூசிக் மாஸ்டர் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் , ஆனால், தங்களுடைய அனுமதி இல்லாமல் அந்த படங்களின் பாடல்களை தற்போது யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்திவருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கினை தொடர்ந்துள்ளனர். இந்தவகையில், இந்த வழக்கில் எதிர்மனுதாரராக இளையராஜாவின் இசை நிறுவனம் மற்றும் இளையராஜா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இவ்வழக்கின் விசாரணை நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நடைபெற்றது.

இளையராஜா
காதல் ஓவியம் To சக்தித் திருமகன் | ரீ என்ட்ரி கொடுக்கும் பாரதிராஜாவின் அறிமுக நாயகன் கண்ணன்!

இதற்கு பதிலளித்துள்ள இளையராஜா தரப்பு , இந்த ஒப்பந்தத்தில் ஆடியோ ரிலீஸ் ஒப்பந்தம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதும் என்றும், யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் பாடலுக்கான உரிமம் தொடர்பான ஒப்பந்தங்கள் எதுவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் பதிலளித்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக இன்று இசைஞானி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள இராண்டவது மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com