பவதாரிணி
பவதாரிணிபுதிய தலைமுறை

#RIPபவதாரிணி: பண்ணை இல்லத்தில் பவதாரிணியின் உடல் நல்லடக்கம்

’இசைஞானி இளையராஜா வீட்டு இளவரசி’ என அழைக்கப்படும் பவதாரிணி, இன்று நம்முடன் இல்லை எனச் செய்தி கிடைத்திருப்பது எண்ணற்ற ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இலங்கையில் காலமான பவதாரிணியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. திநகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு பவதாரிணியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

பவதாரிணியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்

தி.நகர் இல்லத்தில் பவதாரிணியின் உடலுக்கு பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளையராஜாவின் இல்லத்திற்கு கங்கை அமரன், அவரது மகன் பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் வருகை

பாடகி பவதாரிணி உடல் இன்று இரவு தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பவதாரிணியின் இறுதிச்சடங்கு சொந்த ஊரில் நடைபெறும் நிலையில் இளையராஜா தேனிக்கு புறப்பட்டுச் சென்றார்.

தேனிக்கு விரையும் இளையராஜா

“மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது” நடிகர் ரஜினிகாந்த்

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “பவதாரிணியின் இறப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இளையராஜாவிடம் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் இருந்து தி.நகர் இல்லத்திற்கு பவதாரிணி உடல் கொண்டு வரப்பட்ட நிலையில், அங்கு இரவு 10 மணி வரை பவதாரிணி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது.

“இளையராஜா வீட்டின் இன்னிசை அவர்...” பாடலாசிரியர் விவேகா

பாடலாசிரியர் விவேகா புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை பதிவு செய்தார். அவர் கூறுகையில், “யாரும் எதிர்பாராத மிக துயரமான செய்தி. அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி மிக அதிர்ச்சியாக உள்ளது. இசைஞானி இளையராஜாவின் வீட்டில் வளர்ந்த மெல்லிசை அவர். மிக மென்மையாகவும் எளிமையாகவும் பழகக்கூடியவர். சமீபத்தில் கூட பட்டாம்பூச்சியின் கல்லறை எனும் திரைப்படத்திற்கு அவர் இசையமைத்தார். அவரது இசையில் அனைத்து பாடல்களையும் எழுதி இருந்தேன்.

மிகப்பெரிய இசைக்குடும்பத்தில் வந்த அவர் இன்னும் பல வளர்ச்சியை தனது வாழ்வில் கண்டிருக்க வேண்டியவர். கொடுநோயினால் அவர் உயிரிழந்தார் என்பது துயரமான செய்தி. அவரது ஆன்மா சாந்தி அடைய நான் பிரார்த்திக்கிறேன். இசையுலகில் இது பெரிய இழப்பு. அவரது குரலுக்கென்று தனித்துவம் இருந்தது” என்றார்.

பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ராமராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “இந்த செய்தியைக் கேட்டதும் என் மனம் பேதலித்தது. மிகவும் சிரமமான ஒரு சூழல். இது இசைத்துறைக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே ஈடு செய்ய முடியாத இழப்புதான். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்தார்.

”நம் எல்லோருக்குமான பேரிழப்பு” வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன் பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இசை உலகிற்கும், இளையராஜாவின் குடும்பத்தினருக்கும் இது மிகப்பெரிய இழப்பு. இளையராஜாவின் குடும்பம் என்பது அவரது இசையைக் கேட்டு வளர்ந்த நாம் எல்லோரும் அவரது குடும்பம்தான். நம் எல்லோருக்கும் இது பேரிழப்பு” என்றார்.

அன்பு மகளே...

பவதாரிணி உடலுக்கு நடிகர் சிவக்குமார் நேரில் அஞ்சலி

தேனி எடுத்துச் செல்லப்படும் பவதாரிணி உடல்

இளையராஜா மகள் பவதாரிணியின் உடல் தேனி எடுத்துச் செல்லப்படுகிறது. தாய் மற்றும் பாட்டியின் சமாதியின் அருகே பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

நேற்று நள்ளிரவில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட பவதாரிணியின் உடல், அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

பாரதிராஜா அஞ்சலி

மகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்த செல்லும் இளையராஜா...

மறைந்த இசைவாணி பவதாரிணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றுள்ளார் அவரின் தந்தை இளையராஜா

இளையராஜா
இளையராஜா

மகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் இளையராஜா...

பவதாரிணி உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன

மறைந்த இசைவாணி பவதாரிணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த இளையராஜாவுக்கு ஆறுதல் கூறிய இயக்குநர் பாரதிராஜா

பவதாரிணியின் உடலுக்கு அவரது சகோதரர்கள் பட்டுச் சேலைகள் போர்த்தி இறுதி அஞ்சலி 

பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

தேனி லோயர் கேம்ப்பில் உள்ள இளையராஜாவின்  பண்ணை இல்லத்தில் பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பவதாரிணி
பவதாரிணிகோப்புப்படம்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com