மாமல்லபுரத்தில் மோடி தங்கியதால் அதிமுக வெற்றி - இல.கணேசன்

மாமல்லபுரத்தில் மோடி தங்கியதால் அதிமுக வெற்றி - இல.கணேசன்

மாமல்லபுரத்தில் மோடி தங்கியதால் அதிமுக வெற்றி - இல.கணேசன்
Published on

மாமல்லபுரத்தில் இரண்டு நாட்கள் மோடி தங்கியதால் தான் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குகள் எண்ணிக்கை இன்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே இரு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலையில் இருந்தது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் கிட்டத்தட்ட 44ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலையில் உள்ளார். 

இந்நிலையில் அதிமுக வெற்றி குறித்து பேசிய, பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், மாமல்லபுரத்தில் இரண்டு நாட்கள் மோடி தங்கியதால் தான் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதாக தெரிவித்தார். முன்னதாக பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற பாஜகவின் பங்களிப்பு முக்கிய காரணம். தமிழக மக்கள் பாஜகவை எதிர்பார்க்க தொடங்கிவிட்டார்கள் என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com