ஐஐடி மாணவர் தூக்குப்போட்டுத் தற்கொலை: விசாரணை தீவிரம்

ஐஐடி மாணவர் தூக்குப்போட்டுத் தற்கொலை: விசாரணை தீவிரம்

ஐஐடி மாணவர் தூக்குப்போட்டுத் தற்கொலை: விசாரணை தீவிரம்
Published on

சென்னை ஐஐடியில் கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவர் சாஹில் கோர்மத் (23). இவர் சென்னை ஐஐடியில் 5ம் ஆண்டு ocean engineering படித்து வந்தார். ஐஐடி வளாகத்தில் உள்ள ஜமுனா விடுதியில் தங்கி படித்து வரும் இவர், நேற்று இரவு தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை அறிந்து பாதுகாப்பு அலுவலர் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி  வருகின்றனர். அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com