மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: வதந்திகளை பரப்ப வேண்டாம் - ஐ.ஐ.டி நிர்வாகம் 

மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: வதந்திகளை பரப்ப வேண்டாம் - ஐ.ஐ.டி நிர்வாகம் 

மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: வதந்திகளை பரப்ப வேண்டாம் - ஐ.ஐ.டி நிர்வாகம் 
Published on

மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதாக ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப். இவர் சென்னை ஐஐடி வளாகத்தில் சராவியு பெண்கள் விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு எம்.ஏ. படித்து வந்தார். இவர் கடந்த 8-ஆம் தேதி இரவு 12.00 மணிக்கு தனது அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது.

இதனிடையே தனது மரணத்திற்கு ஆசிரியர் சுதர்சனம் பத்மநாபன் தான் காரணம் என பாத்திமா தனது செல்போனில் குறிப்பு எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் தற்கொலைக்கு காரணமாக மேலும் சில ஆசிரியர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்ததாக தெரிகிறது.

இதுதொடர்பான வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். அனுபவமுள்ள அதிகாரிகள் கொண்ட விசாரணைக் குழு இதனை விசாரிக்கும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர்கள் மூவரிடம் காவல்துறை விசாரணை செய்து வருகிறது. 

இந்நிலையில், மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதாக ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவி தற்கொலை விவகாரத்தில் முழுமையான விசாரணை முடியும் வரை வதந்திகளை பரப்ப வேண்டாம் என ஐ.ஐ.டி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com