இளையராஜா
இளையராஜாபுதியதலைமுறை

”இசை தான் எனது மூச்சு” - ஐஐடி மெட்ராஸ் உடன் புதிய அத்தியாயத்தை தொடங்கிய இளையராஜா!

ஐஐடி மெட்ராஸில் இசைஞானி இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி என்ற பெயரில் ஆய்வு மையம் அமைய உள்ளது.
Published on

ஐஐடி மெட்ராஸில் இசைஞானி இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி என்ற பெயரில் ஆய்வு மையம் அமைய உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அக்கல்வி நிலையத்திற்கும், இளையராஜா தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான நிலையில், மையத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைப்பெற்றது.

இதில், இளையராஜா பங்கேற்று அடிக்கல் நாட்டினார். நிகழ்வில் ஐஐடி இயக்குனர் காமகோடியும், இளையராஜாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர். நிகழ்சியில் பேசிய இளையராஜா தான் இசை கற்பதற்காக சென்னைக்கு வந்ததாகவும், ஆனால் இன்னும் இசையை கற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறினார். மேலும், அமைய உள்ள ஆய்வு மையத்திலிருந்து 200 இளையராஜா வரவேண்டும் என்றும் , இசை தனது மூச்சு என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com