தமிழ்நாடு
மெட்ராஸ் ஐஐடியில் விரைவில் சமஸ்கிருத இருக்கை..!
மெட்ராஸ் ஐஐடியில் விரைவில் சமஸ்கிருத இருக்கை..!
மெட்ராஸ் ஐஐடியில் விரைவில் சமஸ்கிருத இருக்கை அமைக்கப்பட உள்ளது.
மெட்ராஸ் ஐஐடியில் செயல்பட்டு வரும் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் விரைவில் சமஸ்கிருத இருக்கை அமைக்கப்பட உள்ளது. சமஸ்கிருத மொழியில் சிறப்பு கவனம் செலுத்தி, வேதங்களில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் நோக்கில் இந்த இருக்கை அமைக்கப்பட உள்ளது.
மெட்ராஸ் ஐஐடியின் முன்னாள் மாணவர் சவால் கிர்பல் மற்றும், ராஜேந்தர் சிங் ஜி மகராஜ் ஆகியோர் சமஸ்கிருத இருக்கை அமைவதற்காக நிதியுதவி அளித்துள்ளனர். சமஸ்கிருத வல்லுநரான சம்பதானாந்தா மிஸ்ரா இந்த இருக்கையின் தலைவராக செயல்பட உள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு நிதி திரட்டப்பட்டு வரும் நிலையில் மெட்ராஸ் ஐஐடியில் விரைவில் சமஸ்கிருத இருக்கை அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.