நீங்களாக சிலைகளை கொடுத்துவிடுங்கள், இல்லையெனில் சிறைதான் - ஐஜி.பொன்மாணிக்கவேல் எச்சரிக்கை

நீங்களாக சிலைகளை கொடுத்துவிடுங்கள், இல்லையெனில் சிறைதான் - ஐஜி.பொன்மாணிக்கவேல் எச்சரிக்கை
நீங்களாக சிலைகளை கொடுத்துவிடுங்கள், இல்லையெனில் சிறைதான் - ஐஜி.பொன்மாணிக்கவேல் எச்சரிக்கை

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் சமீபத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்து திருட்டு சிலைகள் என கூறப்படும் 60 சிலைகள் கண்டறியப்பட்டது. இந்நிலையில், இன்று மேல்மருவத்தூர் அருகே ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டில் மேலும் 80 சிலைகள், கோயில்தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி.பொன்மாணிக்கவேல், “கடத்தப்பட்ட சிலை என்று தெரியாமல் வாங்கியவர் அதனை போலீஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பணம் உள்ளவர்கள் இதுபோல் சிலைகள் வாங்கியிருக்க கூடும், அவர்களாகே முன்வந்து ஒப்படைத்தால் சட்டச் சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். ஒரு மாதத்திற்கு சிலைகளை ஒப்படைத்துவிட்டால் அவர்களுக்கு தண்டனை இல்லை. ஒரு வருடத்திற்கு பின் ஒப்படைத்தால் அவர்கள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும். 

சிலைக்கடத்தல் தொடர்பான குற்றப்பின்னணி உள்ளவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குற்றத்தில் சம்பந்தப்படாதவர்கள் எள்ளலவு அச்சமும் கொள்ள தேவையில்லை. அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது. யார் மீது குற்றம் உள்ளதோ, அதனை நீதிமன்றத்தில் தெரிவிக்கின்றோம். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்தான் நடவடிக்கை எடுக்கிறோம். அறநிலையத் துறையில் மேலும் 9 அலுவலர்களை ரிமாண்ட் செய்ய வேண்டியுள்ளது. சிலைக்கடத்தில் விவகாரத்தில் மிகவும் பொறுமையாகத் தான் நடந்து கொள்கிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com