\
ஐம்பொன் சிலை கடத்தியவர்களை துரத்திச் சென்று பிடித்த ஐஜி பொன் மாணிக்கவேல்..!

ஐம்பொன் சிலை கடத்தியவர்களை துரத்திச் சென்று பிடித்த ஐஜி பொன் மாணிக்கவேல்..!

ஐம்பொன் சிலை கடத்தியவர்களை துரத்திச் சென்று பிடித்த ஐஜி பொன் மாணிக்கவேல்..!
Published on

சென்னையில் காரில் கடத்தப்பட்ட ஐம்பொன் சிலையை ஆட்டோவில் துரத்திச்சென்று சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் பறிமுதல் செய்தார்.

போரூர் காரம்பாக்கம் பதிகுதியில் காரில் ஐம்பொன் சிலைகள் கடத்தப்படுவதாக ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி 9 பேர் அடங்கிய குழுவுடன் 3 ஆட்டோவில் சென்ற அவர் புகார் தெரிவிக்கப்பட்ட காரை மறித்தார். பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் காரில் சோதனையிட்டப்போது அதில் 20 கிலோ கிராம் எடையில் தாலிக்கொடியுடன் அம்மன் ஐம்பொன் சிலையை கண்டுபிடித்தனர்.

அந்த சிலையை பறிமுதல் செய்த அதிகாரிகள் சிலை கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். திருவள்ளூர் பகுதியில் கோவிலில் வழிப்பாட்டில் இருந்த சிலை திருடப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com