"பெற்றோரும் ஆசிரியர்களும் சேர்ந்துள்ள வாட்ஸ்-அப் க்ரூப்பை கலையுங்கள்"- ஐ.ஜி. அட்வைஸ்!

"பெற்றோரும் ஆசிரியர்களும் சேர்ந்துள்ள வாட்ஸ்-அப் க்ரூப்பை கலையுங்கள்"- ஐ.ஜி. அட்வைஸ்!
"பெற்றோரும் ஆசிரியர்களும் சேர்ந்துள்ள வாட்ஸ்-அப் க்ரூப்பை கலையுங்கள்"- ஐ.ஜி. அட்வைஸ்!

“பள்ளிகளில் பெற்றோர் - ஆசிரியர்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட வாட்ஸ் ஆப் குழுக்களை கலைத்துவிட்டு, ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் நேரடியாக கலந்துரையாட வேண்டும்” என தமிழக காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி. முருகன் கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய தமிழக காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி. முருகன், “மாணவர்களிடையே பொறாமை குணத்தை கைவிட்டு, பெற்றோர்களை எதிரியாக பார்க்காமல் அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியில் கிடைக்கும் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உயர்க்கல்வியில் எந்த படிப்பை படித்தாலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். வீடுகளில் குழந்தைகளின் முன் பெற்றோர்கள் செல்போன்களில் மூழ்கி இருக்காதீர்கள். பள்ளியிலிருந்து வீடு திரும்புகையில், அவர்களிடம் அனுசரணையாக பேசுங்கள். படி படி என அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள்” என்று பேசினார்.

இவ்விழாவில் கல்வியிலும் விளையாட்டிலும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்வித்துறை உயர் அதிகாரிகள் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com