முயன்றால் முடியும்: 4-வது முறையாக நீட் தேர்வெழுதி வெற்றிபெற்ற இருளர் இன மாணவி

முயன்றால் முடியும்: 4-வது முறையாக நீட் தேர்வெழுதி வெற்றிபெற்ற இருளர் இன மாணவி
முயன்றால் முடியும்: 4-வது முறையாக நீட் தேர்வெழுதி வெற்றிபெற்ற இருளர் இன மாணவி

தொடர்ந்து 4வது முறையாக நீட் தேர்வெழுதி வெற்றிபெற்ற இருளர் இன மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தும்பி பெட்டு இருளர் கிராமத்தைச் சேர்ந்த பாலன் - ராதா தம்பதியரின் மகள் ஸ்ரீமதி. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 2019 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்தார்.

இதையடுத்து நீட் தேர்வு எழுதிய அவர், எதிர்பார்த்த கட்- ஆப் மார்க் கிடைக்காததால் நீட் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு படித்தார். இதைத் தொடர்ந்து 3 முறை தோல்வியை சந்தித்த அவர், 4 வது முறையாக (2022) நடபாண்டு நீட் தேர்வில் 370 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றார். இந்நிலையில், அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

மூன்று முறை போதிய கட்-ஆப் கிடைக்காத நிலையில், மருத்துவர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடர்ந்து படித்து 4-வது முயற்சி வெற்றிப்பெற்று நீலகிரியில் இருளர் இன முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கடினமாக உழைத்து தொடர்ந்து நீட் தேர்வு எழுதி மருத்துவ கனவை நனவாக்கிய ஸ்ரீமதியை இருளர் சமுதாயம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாராட்டியதோடு நீலகிரி ஆட்சியர் அம்ரித்தும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com