\
“எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடிதான் பறக்கும்” - உதயக்குமார்

“எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடிதான் பறக்கும்” - உதயக்குமார்

“எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடிதான் பறக்கும்” - உதயக்குமார்
Published on: 

எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடிதான் பறக்கும் என அமைச்சர் உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எதிர்க்கட்சிகள் எல்லா மசோதாக்களையும் எதிர்ப்பது போல விவசாய மசோதாவையும் எதிர்க்கின்றனர். அவர்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது என்று தெரியவில்லை. நவீன காலத்திற்கேற்ப விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்த விவசாய மசோதா உதவும்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் என எல்.முருகன் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயக்குமார், “எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும். அந்தந்த கட்சித்தலைவர்கள் அவரவர் கொடிகளை தூக்கிப்பிடிக்க உரிமை உள்ளது. அவர்களுடைய கட்சிக்கொடியை தூக்கிப்பிடிக்கதான் அவரை தலைவராக நியமித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com