\
'பசித்தால் நாங்களே எடுத்துக்கொள்வோம்' - வாயால் தாழ்ப்பாளை திறந்து பசியாறும் ஆடுகள்

'பசித்தால் நாங்களே எடுத்துக்கொள்வோம்' - வாயால் தாழ்ப்பாளை திறந்து பசியாறும் ஆடுகள்

'பசித்தால் நாங்களே எடுத்துக்கொள்வோம்' - வாயால் தாழ்ப்பாளை திறந்து பசியாறும் ஆடுகள்
Published on

சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆடு ஒன்று தனது வாயால் கொட்டகையின் தாழ்ப்பாளை திறந்து தீவணத்தை எடுத்துக்கொள்ளும் நிகழ்வு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கனம்பட்டியில் கலைமணி சாமிநாதன் என்பவர் பண்ணையில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. இந்த ஆடுகளுக்கு உணவு வழங்க தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் உணவு கூடத்தின் கதவை பணியாளர் திறந்துவிட்ட பின்னர் தான் ஆடுகள் பசியாறும்.

இதனை பார்த்து பழக்கப்பட்ட ஆடு ஒன்று பணியாளர் இல்லாத நேரத்தில் உணவு கூடத்தின் தாழ்ப்பாளை தனது வாயால் திறக்கிறது. அதன்பின்னர் வரிசையாக காத்திருக்கும் ஆடுகள் கதவை திறந்ததும் கூடத்திற்குள் சென்று பசியாறுகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com