சசிகலா, தினகரன் இணைப்பு.. தேனி கூட்டத்தில் நடந்தது என்ன? - மாவட்ட செயலாளர் சையது பேட்டி

சசிகலா, தினகரன் இணைப்பு.. தேனி கூட்டத்தில் நடந்தது என்ன? - மாவட்ட செயலாளர் சையது பேட்டி

சசிகலா, தினகரன் இணைப்பு.. தேனி கூட்டத்தில் நடந்தது என்ன? - மாவட்ட செயலாளர் சையது பேட்டி
Published on

சசிகலா மற்றும் தினகரனை ஒருங்கிணைத்து ஒரே கட்சியாக இருந்தால் எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம் என தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தெரிவித்துள்ளார்

தேனி பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ்ஸின் பண்ணைவீட்டில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் டிடிவி தினகரன், சசிகலா இணைப்பு குறித்த ஆலோசனைக்கு பின் பேசிய தேனி அதிமுக மாவட்டச் செயலாளர் சையது கான், " உள்ளாட்சி தேர்தல் தோல்வி குறித்து செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி கருத்துக்களை கேட்டோம், அதிமுக தோற்றதற்கு காரணம் நாம் பிரிந்து இருந்ததால்தான் என அனைவரும் கூறினார்கள்.

அந்த தவறு மீண்டும் நடக்கக் கூடாது என்பதனால்தான் நமது கட்சி ஒன்றாக இணைய வேண்டும்.அதிமுக என்ற கட்சி ஒரே கட்சியாக இருந்தால் எந்த தேர்தல் ஆனாலும் வெற்றி பெறுவதற்கு நமக்குதான் வாய்ப்பிருக்கிறது என்று கூறி ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திடம் கொடுத்துள்ளோம். அவரும் எங்களின் விருப்பத்தை ஏற்றுக் கொள்வதாக சொல்லி இருக்கிறார்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com