மதுக்கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்: ப.சிதம்பரம் கருத்து

மதுக்கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்: ப.சிதம்பரம் கருத்து
மதுக்கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்: ப.சிதம்பரம் கருத்து

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது...

" துரதிர்ஷ்டவசமாக நாடு முழுவதும் மது அருந்தும் பழக்கம் பரவிவிட்டது. தமிழ்நாடு அதற்கு விலக்கல்ல. பல இடங்களில் சில பெண்கள் கூட மது அருந்துகிறார்கள். ஆனால், நான் மது அருந்துவது கிடையாது. அதனால் மது அருந்துபவர்களை தீயவர்கள் என்றும் சொல்ல முடியாது. மதுக்கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகிவிடும். இதனை யாரும் மறுக்க முடியாது. கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டுமென்றால் மதுக்கடைகளை திறந்துதான் ஆக வேண்டும்" என்றவர் தொடர்ந்து...

" நாடு முழுவதும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில ஹெச்.ராஜா சென்று மதுக்கடைகளை மூடச் சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும். அதன் பின்பு தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சொல்லலாம். கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்திற்கு காரணமே பெட்ரோல் டீசல் விலை ஏற்றம்தான் என்றவர் பெட்ரோல் டீசல் விலை குறைந்தால் கட்டுமான பொருட்களின் விலையும் குறைந்து விடும்" என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com