பேருந்துகளை இயக்க இடையூறு செய்தால் நடவடிக்கை: அமைச்சர் கே‌.சி.வீரமணி

பேருந்துகளை இயக்க இடையூறு செய்தால் நடவடிக்கை: அமைச்சர் கே‌.சி.வீரமணி
பேருந்துகளை இயக்க இடையூறு செய்தால் நடவடிக்கை: அமைச்சர் கே‌.சி.வீரமணி

அரசுப் பேருந்துகளை இயக்கவிடாமல் தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‌ என வணிக வரித்துறை அமைச்சர்‌ கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்கும்,  நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில் வேலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் கொணவட்டம் பணிமனையில் அமைச்சர்‌ கே.சி.வீரமணி இன்று ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது பேசிய அவர், வேலூர் மாவட்டத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படா‌த வகையில் போதுமான பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவி‌த்தார். ‌தற்காலிக ஓட்டுநர்களை பயன்படுத்தக்கூடிய சூழல் ஏற்பட்டால், அதற்கும் அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் வீரமணி கூறினார். மேலும், அரசு மேற்கொண்ட நடவடிக்கையால்‌ போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், அரசுப் பேருந்துகளை இயக்கவிடாமல் தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com