கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ

கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ

கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ
Published on

தலைமைச் செயலாளர் உடனான பேச்சுவார்த்தையில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தைத் தொடர்வோம் என ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 7-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நிபந்தனைகள் ஏதுமின்றி போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று எச்சரிக்கை விடுத்திருந்தது. நீதிமன்றத்தில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நேரில் ஆஜரான போது அவர்களிடம் நீதிபதிகள் இவ்வாறு கூறினர்.

நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து தற்காலிகமாக போராட்டத்தை திரும்பப் பெற்றதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் சுப்ரமணியன், வரும் 21‌ம் தேதி தலைமைச் செயலாளரை நேரில்‌‌ ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.

ஆரம்ப பள்ளி ஆசியர் சங்க தலைவர் தாஸ் கூறுகையில், இது தற்காலிக முடிவுதான். தங்களது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதுகுறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com