அதிமுக வேட்பாளர் தென்னரசை கோட்டைக்கு அனுப்பினால் ஆட்சி மாறாது. ஆனால்... - அண்ணாமலை

அதிமுக வேட்பாளர் தென்னரசை கோட்டைக்கு அனுப்பினால் ஆட்சி மாறாது. ஆனால்... - அண்ணாமலை
அதிமுக வேட்பாளர் தென்னரசை கோட்டைக்கு அனுப்பினால் ஆட்சி மாறாது. ஆனால்... - அண்ணாமலை

அதிமுக வேட்பாளர் தென்னரசை கோட்டைக்கு அனுப்பினால் ஆட்சி மாறாது, ஆனால் அடுத்த நாளே ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் என மொத்தம் 24,200 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும் என ஈரோட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது, திமுகவின் வாக்குறுதியை மக்களே செய்வதற்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், மக்கள் முன்னேற்ற திட்டங்கள் எதையும் திமுக அரசு செய்யவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.

கேஸ் மானியம் மற்றும பெண்களுக்கான ஊக்கத் தொகை என மொத்தம் 24,200 ரூபாயை எடுத்து வைத்து விட்டு மக்களிடம் வாக்கு கேளுங்கள். சாராய அமைச்சர் என செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை அங்கு கொள்ளை அடித்த காசை இங்கு ஆறாய் ஓட விட்டிருக்கிறார். அது உங்கள் பணம் வாங்கிக் கொள்ளுங்கள் தவறு இல்லை. ஆனால்,இரட்டை இலைக்கு வாக்களித்து விடுங்கள்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தேர்தல் முடிந்து கையில் இருக்கும் மை அழிவதற்குள் சென்னைக்கு ஓடிவிடுவார் அவரை மக்கள் சந்திக்க முடியாத சூழல் ஏற்படும். அதனால் மக்களுடன் மக்களாய் இருக்கும் தென்னரசை தேர்ந்தெடுங்கள். விசைத்தறி தொழிலுக்கு ஆயிரம் யூனிட் இலவசம் மின்சாரம் தருவேன் என தெரிவித்து விட்டு 22 மாதங்கள் ஒன்றும் செய்யாமல் தற்போது தேர்தல் வந்தவுடன் ஆயிரம் யூனிட் தருவதாக கூறுகிறார்கள். இத்தனை நாளாக ஸ்டாலின் கோமாவில் இருந்தாரா.

முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா போன்றோரை கடுமையாக தரக்குறைவாக விமர்சித்தவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் இளையராஜாவை ஜாதி பெயரைச் சொல்லி விமர்சித்தவர் கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்வர் வாய் திறக்கவில்லை. திமுக 517 வாக்குறுதிகளில் 49 வாக்குறுதிகளை தான் நிறைவேற்றியுள்ளது.

ஆனால், உதயநிதியின் ரெட் ஜெயின்ட் நிறுவனம் மூலம் 60 படங்களை வெளியிட்டுள்ளனர், இது அவர்கள் நிறைவேற்றிய வாக்குறுதிகளை காட்டிலும் அதிகம். இங்கு வந்துள்ள ஒவ்வொரு அமைச்சர்களும் கடன்காரர்கள், ஊக்கத் தொகை மற்றும் கேஸ் மானியம் என மொத்தம் 24,200 ரூபாய் மக்களுக்கு கடன் வைத்துள்ளார்கள்.

தென்னரசை கோட்டைக்கு அனுப்பினால் முதல்வர் ஸ்டாலின் உங்களுக்கு தர வேண்டிய 24,200 ரூபாயை தருவார், அவர் சொன்ன வாக்குறுதியை மக்கள் செய்ய வைக்க வேண்டும். பாக்கெட் சாராயத்திற்கு கையெழுத்து போட்ட பேனாதான் அந்த பேனா. 3,50,000 பேருக்கு அரசு வேலை என்றார்கள் தனியார் துறையில் வருடத்திற்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்கிறார்கள் எதையாவது செய்துள்ளார்களா என கேள்வி எழுப்பினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com