“யாரிடமோ டிடிவி விலை போய்விட்டார்” - புகழேந்தி

“யாரிடமோ டிடிவி விலை போய்விட்டார்” - புகழேந்தி

“யாரிடமோ டிடிவி விலை போய்விட்டார்” - புகழேந்தி
Published on

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுக அரசை ஆதரிப்பார் என்று அமமுக முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

கோவை மசக்காளிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புகழேந்தி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “டிடிவி தினகரனுடன் ஜால்ரா போடுபவர்கள் ஒரு நான்கு பேர் உள்ளனர். அவரால் பதவியை இழந்தவர்கள் இன்று தவித்து வருகிறார்கள். பதவியை இழந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு டிடிவி நன்றி கடன் பட்டவராக இருந்தால் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். 

அதிமுக ஆட்சிக்கும், கட்சிக்கும் ஆபத்து வந்தால் நாங்கள் சிப்பாய்களாக நிற்போம். சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுக அரசை ஆதரிப்பார். என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன. விரைவில் வெளியில் விடுவேன். தினகரன் விரைவில் கட்சியை கலைத்து விடுவார். சசிகலாவின் தண்டனை காலம் 4 வருடங்கள் உள்ளன. ஆனால் மூன்று வருடத்திற்குள் வெளியே வருவார் .

தேர்தலில் சீமான் போட்டியிடுகிறார். ஆனால் டிடிவி போட்டியிட மறுக்கிறார். எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாவிட்டால் யாரிடமோ டிடிவி விலை போய்விட்டார். இரட்டை இலையை அசிங்கப்படுத்தி வருகிறார் டிடிவி. என்னையும் தேர்தலில் நிற்க வைத்து மோசம் செய்து விட்டார். நான் பாஜகவிற்கு செல்லும் மனிதன் அல்ல. அம்மாவின் தீவிர விசுவாசி. டிடிவியால் இனி எழவே முடியாது. அதேபோல் சின்னாம்மாவிடம் அவர் எந்தப் பணமும் வாங்க முடியாது” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com