பணப்பட்டுவாடா நிரூபணமானால் 6 ஆண்டுக்கு தேர்தலில் நிற்க முடியாது

பணப்பட்டுவாடா நிரூபணமானால் 6 ஆண்டுக்கு தேர்தலில் நிற்க முடியாது
பணப்பட்டுவாடா நிரூபணமானால் 6 ஆண்டுக்கு தேர்தலில் நிற்க முடியாது

பணப்பட்டுவாடா செய்யப்பட்டது நிரூபணமானால் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர் 6 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவார் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் இதைக் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் பிறப்பித்த 29 பக்க உத்தரவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

* வருமானவரித்துறை சோதனைகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளிக்கப்பட்டது

* விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்களிடமிருந்து ரூ.5 கோடி பறிமுதல்

* கட்சி நிர்வாகிகளுக்கு ரூ.89 கோடி அளித்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

* பணம் விநியோகிக்கவேண்டிய பட்டியல் எம்.எல்.ஏக்கள் விடுதியில் பறிமுதல்

* வாக்காளர் பெயருக்கு அருகில் கட்சிப் பெயர் குறிப்பிட்டு வைக்கப்பட்ட பட்டியல் கைப்பற்றப்பட்டது

* பல்வேறு நடவடிக்கைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டிருக்கிறது

* தேர்தலின் தூய்மை பாதிக்கப்பட்டதுடன், அனைவருக்கும் சமமான களம் இல்லாத சூழல் ஏற்பட்டது

* வாக்காளர்களுக்கு லஞ்சம் அளித்தது நிரூபிக்கப்பட்டால் ஆறு ஆண்டுகள் தகுதி நீக்கம்

* லஞ்சம் கொடுத்து தேர்வு செய்யப்பட்டால், தேர்வு செல்லாது என அறிவிக்கப்படலாம்

* தற்போதைய சூழலில் இடைத் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற வாய்ப்பு இல்லை

* அரசியல் தலைவர்கள் கண்டுபிடிக்கும் புதுப்புது யுக்திகளை கடுமையாக கையாளவேண்டும்

* சட்டங்களை முறியடித்து முறைகேடுகளை அரங்கேற்றுவதில் சில மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன

* வேட்பாளர் அல்லது நிர்வாகியின் முறைகேடு குறித்து எதுவும் தெரியாது என கட்சியின் தலைவர்கள் கூறமுடியாது

* தலைவர்களின் மறைமுக ஒப்புதலாவது இல்லாமல் வேட்பாளர்களால் முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கமுடியாது

* தவறிழைக்கும் வேட்பாளர்களையும் நிர்வாகிகளையும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கட்டுப்படுத்தவேண்டும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com