"முருகன் தமிழ்க்கடவுள் எனில், விநாயகர் எப்படி இந்திக்கடவுளாக முடியும்?" - திருமாவளவன்

"முருகன் தமிழ்க்கடவுள் எனில், விநாயகர் எப்படி இந்திக்கடவுளாக முடியும்?" - திருமாவளவன்

"முருகன் தமிழ்க்கடவுள் எனில், விநாயகர் எப்படி இந்திக்கடவுளாக முடியும்?" - திருமாவளவன்
Published on

'முருகன் தமிழ்க்கடவுள் என்றால், விநாயகர் எப்படி இந்திக்கடவுளாக முடியும்?' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வியெழுப்பியுள்ளார்.

திராவிடர் கழகத்தின் விருது வழங்கும் விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “தற்போது முருகன் தமிழ்க்கடவுள் என்கிறார்கள், முருகன் தமிழ்க்கடவுள் எனும் வழுக்குப்பாறையில் கால்வைத்தால், அது சனாதனம் என்ற படுகுழியில்தான் தள்ளிவிடும்.

ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ்க்கடவுள் என்றால், விநாயகர் எப்படி இந்திக்கடவுளாக முடியும்? தைப்பூசத்துக்கு மட்டும் விடுமுறை விட்டுவிட்டால், தமிழர்கள் எல்லாம் தலைநிமிர்ந்து விடுவார்களா?

குல தெய்வ வழிபாட்டையும் பெருதெய்வ வழிபாடாக மாற்றிவிட்டார்கள். எனவே, குலதெய்வ வழிபாடும் சனாதன மயமாகி வருகிறது. இந்து என்ற ஒற்றை சொல்லில் எல்லோரையும் மயக்கி கட்டுக்குள் கொண்டுவர பார்க்கிறார்கள்” என்று தொல்.திருமாவளவன் பேசினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com