அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்றால் கூட்டணியில் இருங்கள் - கே.பி.முனுசாமி

அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்றால் கூட்டணியில் இருங்கள் - கே.பி.முனுசாமி
அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்றால் கூட்டணியில் இருங்கள்  - கே.பி.முனுசாமி

தேசிய கட்சியோ, மாநில கட்சியோ அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்பவர் மட்டுமே கூட்டணியில் இருக்க முடியும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக பேசிய கே.பி.முனுசாமி “தேசிய கட்சியோ, மாநில கட்சியோ அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பவர் மட்டுமே கூட்டணியில் இருக்க முடியும். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்காத கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருக்க முடியாது. அதிமுகவுக்கு இரு தலைமை என்பதால் எந்த பிரச்னையும் இல்லை, இதில் சசிகலா தலையிட வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளார்

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை கூட்டணி வேட்பாளராக பாஜக ஏற்க தயங்கும் நிலையில் கே.பி.முனுசாமி இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com