
உச்சநீதிமன்ற விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் மார்ச் 29 வரை காலக்கெடு அளித்துள்ளது. காலக்கெடு முடிய இன்னும் இரண்டு தினங்களே உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முத்த வழக்கறிஞர்களுடன் தமிழக அதிகாரிகள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் காவிரி விவகாரத்தை அணுகும் வழக்கறிஞர்கள் குழு, முதலமைச்சரின் முதன்மை செயலாளர் சாய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நீண்ட ஆலோசனைக்கு பிறகு மார்ச் 29க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. வரும் சனிக்கிழமை வழக்கு தொடர வழக்கறிஞர் நாப்தே பரிந்துரை வழங்கினார். அந்த பரிந்துரையை ஏற்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.