இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் என்ன ஆகும்?
இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்திடம், இருதரப்பினரும் வாதங்களை முன்வைத்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாளை இறுதி நாள் என்பதால், இன்றே தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எம்ஜிஆர் மறைவின் போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது போலவே, தற்போதும் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒருவேளை இரட்டை சிலை சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தால், தமிழக சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட சின்னங்களில் இருந்து ஆளுக்கு ஒரு சின்னத்தை தேர்வு செய்யும் சூழல் உருவாகும். சசிகலா தரப்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மதுசூதனன் ஆகியோர், தங்களுக்குள்ள சொந்த செல்வாக்கு மூலம் மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் நிலை உருவாகும். அதிமுகவிற்கு பலமுறை வெற்றி தேடித்தந்து ஆட்சியில் அமரவைத்த அந்தச் சின்னம் இல்லாமல் தேர்தலைச் சந்திப்பது அதிமுகவினருக்குப் பெரும் பின்னடைவாகவே இருக்கும்.