தலைவர்களின் சிலைகள் அவமதிப்பு: இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென செல்லூர் ராஜூ கோரிக்கை

தலைவர்களின் சிலைகள் அவமதிப்பு: இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென செல்லூர் ராஜூ கோரிக்கை
தலைவர்களின் சிலைகள் அவமதிப்பு: இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென செல்லூர் ராஜூ கோரிக்கை

தமிழகத்தில் தலைவர்களின் சிலையை அவமதிப்பு செய்பவர்களை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார்.

மதுரையில் வரும் 29 ஆம் தேதி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டதிற்கான பிரத்யேக பிரச்சார வாகனத்தை முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி.உதயகுமார் செல்லூர் ராஜூ ஆகியோர் துவக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ,,,

அதிமுகவில் போட்டி இருக்கும் பொறாமை இருக்காது தமிழகத்தில் தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. சிலை அவமதிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் தமிழகத்தில் எந்த தலைவர் சிலையும் அவமதிப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com