சென்னையில் சாலையோர விற்பனையாளர்களுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளன. இதற்காக 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
சென்னையில் 15 மண்டலங்களில் சாலையோர கடைகள் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியினை காவல்துறையினரின் உதவியோடு பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பான திட்ட அறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திலும் விற்பனையாளர்கள் சங்கத்தில் இருந்து 6 பேரை தேர்வு செய்யும் பணி ஒரு மாதத்திற்குள் முடியும் என்று கூறியுள்ள அதிகாரிகள், விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கையில் அவர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.