புதிய தலைமுறையின் வெற்றிப்படிகள் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் நம்பிக்கையுடன் பொது தேர்வை எதிர் கொள்ள வழிகாட்டும் விதமாக தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ளவும் அதிக மதிப்பெண்களைப்பெறவும் தமிழ்நாடு முழுதும் வெற்றிப்படிகள் என்ற வழிகாட்டும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது புதிய தலைமுறை அந்த வகையில் தென்காசியில் ICI அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெற்றிப்படிகள் நிகழ்ச்சியை நடைபெற்றது.
பள்ளி கல்வி துறை கோவை PPG குரூப் ஆப் இன்சிடியுஷன்ஸ் ஆகிவற்றுடன் புதிய தலைமுறையும் கரம் கோர்த்தது. தென்காசி மாவட்ட ஆட்சியர் கமில் கிஷோர், நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ரெஜினி, கோவை PPG கல்வி நிறுவனங்களின் இயற்பியல் பிரிவு தலைமை விரிவுரையாளர் திரு நித்யப்ரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார். +2 தேர்வை எளிதாக கையாண்டு அதிக மதிப்பெண்களை பெறுவது குறித்து வழிகாட்டி நம்பிக்கை ஊட்டினார். தன்னம்பிக்கை பேச்சாளர் திருமதி சுமதி ஸ்ரீ கலந்து கொண்டு மாணாக்கருக்கு தன்னபிக்கை ஊட்டி உரையாற்றினார்.
இதில் 500 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று பயன் பெற்றனர்.