215 நாட்களில் 3000ஆவது ரயில் பெட்டியை தயாரித்து பெரம்பூர் ஐசிஎஃப் சாதனை

215 நாட்களில் 3000ஆவது ரயில் பெட்டியை தயாரித்து பெரம்பூர் ஐசிஎஃப் சாதனை

215 நாட்களில் 3000ஆவது ரயில் பெட்டியை தயாரித்து பெரம்பூர் ஐசிஎஃப் சாதனை
Published on

செ‌ன்னை பெரம்பூர் ஐசிஎஃப் நிறுவனம் 215 நாட்‌களில் 3 ஆயிரமாவது ரயில் பெட்டியை தயாரித்து சாதனை படைத்துள்ளது.

நடப்பு ஆண்டில் 9 மாதங்களுக்குள்‌ பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் நிறுவனம் மூன்றாயிரமாவது ரயில் பெட்டியை தயாரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொழிலாளர்களின் சீரிய அர்ப்பணிப்பு மற்றும் செயலால் வேகமான முறையில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது அதிகரித்து வரும் ரயில் பெட்டிகள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

2014ஆம் ஆண்டு வரை ஆயிரம் ரயில் பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்ட நிலையில், இதற்கு முன்பு ‌289 நாட்களில் எவ்வளவு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டதோ, அது தற்போது 215 நாட்களில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com