ஜல்லிக்கட்டு தமிழ் மண்ணின் மரபுகளின் தொடர்ச்சி என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நம் தமிழ் மண்ணில் அரங்கேறியிருப்பதாகவும், இது மரபுகளின் தொடர்ச்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கலாசாரத்தின் வெளிப்பாடான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் சகாயம் நம்பிக்கை தெரிவித்தார்.