அரசியலுக்கு வருகிறாரா சகாயம் ..? கமல்,ரஜினி அரசியல் பற்றிய அவருடைய பதில்.!
சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படக் கூடிய சுழல் வந்தால் என்னுடையப் அரசியல் முடிவும் மாறும் என சகாயம் பேசியுள்ளார்.
நெடுஞ்சாலை படத்தின் ஹீரோ ஆரி "மாறுவோம், மாற்றுவோம்" என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் மோகன் ராஜா, அமீர் ,விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். விழாவில் பங்கேற்று பேசியவர்களில் சிலர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்ற தங்களுடைய விருப்பத்தை வெளிபடுத்தினர். இதன்பின்னர் பேசிய, சகாயம் "சாதாரணமாக மதுரைக்கு வர வேண்டும், திருச்சிக்கு வர வேண்டும் என்பது போல அரசியலுக்கு வரச் சொல்லுகிறார்கள். அரசியலில் ஊழல் ஆழமாக வேரூன்றியுள்ளது ,அதை அறுத்தெறிய வேண்டும் அப்படியான வல்லமை நம் சமூகத்திடம் தான் இருக்கிறது என்றார்.
பின்னர் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா ? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ஊழலை எதிர்ப்பது என்பதே ஒரு அரசியல்தான். நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் கூட பல்வேறு காலக் கட்டங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை நான் மேற்கொண்டு வந்து இருக்கிறேன் அதை கூட அரசியலாக கருதலாம். ஆனால் தேர்தல் அரசியல் என்பது வேறு, தேர்தல் அரசியலை தாண்டி இந்தச் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து பேசி வந்திருக்கிறேன். எனவே என்னுடைய சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படக் கூடிய சுழலில் இந்தச் சமூகம் முடிவு எடுக்க கூடிய காலக் கட்டம் வந்தால் அது என்னுடைய முடிவிலும் தாக்கதை ஏற்படுத்தம் என தன்னுடைய அரசியல் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.
ஊழலை எதிர்க்க அரசியல் கட்சிகளோடு சேர்ந்து செயல்படும் சாத்தியம் இல்லை என தெளிவுபடுத்தியவர் கமல், ரஜினியின் அரசியல் பற்றிய கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்தார்.