\
தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
Published on: 

தமிழகத்தில் 20-க்கும் அதிகமான ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி சுனில் பாலிவால் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக டி. உதயசந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக இருந்த டி.சபிதா தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசு தொழிற்துறை முதன்மைச் செயலாளராக அதுல்யா மிஸ்ரா பதவி வகிப்பார். அவர் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியை கூடுதலாக கவனிப்பார் என அரசு அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளராக முகமது நஸிமுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நகரின் மாவட்ட ஆட்சியராக வி.அன்புசெல்வன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பி.பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பை முன்னர் கவனித்து வந்த கஜலட்சுமி சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக பணியாற்றுவார் என கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com