தமிழ்நாடு
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையச் செயலர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளராக இருக்கும் எஸ்.பழனிசாமி, பேரூராட்சிகளின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருக்கும் எல்.சுப்பிரமணியன் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக கோவிந்த ராவும், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஆர்.கண்ணனும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக அண்ணாதுரையும் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை ஆணையராக சிகி தாமஸும், மருத்துவ தேர்வு வாரிய தலைவராக டி.எஸ்.ராஜசேகரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.