ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு!

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு!

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு!
Published on

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2023 ஜனவரி 31-ம் தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்க செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் தலைமைச் செயலாளர் இறையன்பு.
 
மத்திய அரசு சட்டப்படி ஆண்டுதோறும் செய்ய வேண்டிய நடைமுறை அடிப்படையில், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பான சுற்றறிக்கையில், ''தமிழகத்தில் பணியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2023-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்க செய்ய வேண்டும். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரும் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் தங்களது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். சரியான காரணமின்றி சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com