\
பதவியை ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி

பதவியை ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி

பதவியை ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி
Published on

அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

விஜய் மாருதி பிங்களே 2004ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி. 2013ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி துணை ஆணையாளராக இருந்த போது விஜய் பிங்களே, தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்ததாரர்களை, மீண்டும் தரமான சாலைகள் போட வைத்தார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு சென்னை நகரின் உள் கட்டமைப்பு பணிகளை கண்காணித்தார். பின்னர் தொழிற்துறை இணை செயலாளராக மாற்றப்பட்ட அவர், சென்னையில்‌ முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்திக் காட்டினார். 

எம்பிபிஎஸ் முடித்து அரசு அதிகாரியாக உயர்ந்து, நிர்வாகத்தினுள் ஒருவராக இருந்து சீர்திருத்தங்களை கொண்டு வர நினைத்த விஜய் பிங்களே, சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை தமிழக அரசு இதுவரை ஏற்கவில்லை என தெரிகிறது. அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் நோக்கத்துடன் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தம்மை இணைத்து கொண்டு அவர் செயல்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com