விருப்ப ஓய்வை எதிர்நோக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி..!
மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு, விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்துள்ளார்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு. தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலாளராக பதவி வகித்து வரும் அவர், விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனிப்பட்ட காரணங்களால் விருப்ப ஓய்வு கோருவதாக தெரிவித்துள்ளார். இவர் தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராகவும் தற்போது உள்ளார்.
ஸ்டாட் அப் தொடங்குவதற்கான ஆலோசனையில் இருக்கும் சந்தோஷ் பாபு அதற்காகவே விருப்பு ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது.
1995-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு, ஏற்கெனவே பல முக்கிய பொறுப்புகள் வகித்தவர். மின்னணு பாதுகாப்பு கொள்கை, மின் கழிவுக் கொள்கை உள்ளிட்ட விஷயங்களில் சந்தோஷ் பாபுவின் பங்கு முக்கியமானது.