நீட் மாணவிக்கு ஒரே நாளில் இருப்பிட சான்றிதழ் பெற உதவிய ஐஏஎஸ் அதிகாரி

நீட் மாணவிக்கு ஒரே நாளில் இருப்பிட சான்றிதழ் பெற உதவிய ஐஏஎஸ் அதிகாரி
நீட் மாணவிக்கு ஒரே நாளில் இருப்பிட சான்றிதழ் பெற உதவிய ஐஏஎஸ் அதிகாரி

மருத்துவ கவுன்சிலில் சேர இருந்த மாணவியின் இருப்பிட சான்றிதழில் இருந்த எழுத்துபிழையை ஒரே நாளில் சரி செய்து கொடுத்து உதவியிருக்கிறார் உதயசந்திரன் ஐஏஎஸ்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ராயபாளையம் புதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியம் - விஜயலட்சுமி தம்பதியருக்கு நிவேதா மற்றும் கோபிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நிவேதா பயோ மெடிக்கல் என்ஜினியரிங் இறுதி ஆண்டு படிக்க கோபிகா கடந்த 2018ஆம் ஆண்டு எஸ்.வி.என் பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பு முடித்தார். 1012 மதிப்பெண்கள் பெற்ற கோபிகா மருத்துவர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தோடு முயன்று முதல் முறையாக பங்கேற்ற நீட் தேர்வில் 137 மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து முயற்சித்து கடந்த தேர்வில் 432 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றும் கலந்தாய்வில் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை.

இருப்பினும் மனம் தளராது நீட் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்த மாணவி கோபிகா, இந்த முறை நடந்த நீட் தேர்வில் 572 மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்விற்காக காத்திருக்கிறார். இந்நிலையில் கலந்தாய்விற்கு செல்லும்முன் தனது ஆவணங்களை சரிபார்த்தபோது இருப்பிட சான்றதழில் தனது பெயரில் எழுத்துப்பிழை இருந்தது தெரியவந்துள்ளது.

அதனை சரி செய்வதற்காக ஆன்லைன் மூலம் கோபிகா விண்ணப்பித்துள்ளார். அப்போது 15 முதல் 20 நாட்கள் வரை சான்றிதழ் கிடைக்க அவகாசம் தேவைப்படும் என்பதை அறிந்த கோபிகா தனது கணித ஆசிரியரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் ஈரோடு மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரும் தொல்லியல்துறை இயக்குனருமான உதயசந்திரன் ஐ.ஏ.எஸிடம் இமெயில் மூலம் உதவி கேட்டுள்ளார்.

இதனை பார்த்து உடனடியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனை தொடர்புகொண்டு மாணவிக்கு இருப்பிட சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதோடு தனது நண்பர் ஒருவரை நேரடியாக சென்று உதவமாறும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் உடனடியாக மாணவி கோபிகாவிற்கு பிறப்பிட சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதை அடுத்து ஒரு மணிநேரத்தில் வருவாய்துறையினர் கோபிகாவிற்கு பிறப்பிட சான்றிதழ் வழங்கி உதவியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com