\
‘பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு செல்லவில்லை’ - ஆளுநர் செயலர் விளக்கம்

‘பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு செல்லவில்லை’ - ஆளுநர் செயலர் விளக்கம்

‘பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு செல்லவில்லை’ - ஆளுநர் செயலர் விளக்கம்
Published on

திருச்சி பாரதிதாசன் ஆய்வுக்கூட்டத்துக்கு செல்லவில்லை என ஆளுநரின் செயலர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை ஆலோசனைக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே ஆலோசனைக்கூட்டத்துக்கு ஆளுநரின் செயலர் வருவது தனக்கு தெரியாது என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருச்சி பாரதிதாசன் ஆய்வுக்கூட்டத்துக்கு செல்லவில்லை என ஆளுநரின் செயலர் ராஜகோபால் தெரிவித்துள்ளார். தான் திட்டத்தை உறுதி செய்வதற்குள் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பிவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் இன்று மாலை 6 மணிக்கு ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அதில் ஆளுநரின் செயலர் ராஜகோபால் கலந்துகொள்ளவுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com