“கருணாநிதியின் எளிமையைக் கண்டு வியந்தேன்” - ராகுல் புகழாரம்

“கருணாநிதியின் எளிமையைக் கண்டு வியந்தேன்” - ராகுல் புகழாரம்
“கருணாநிதியின் எளிமையைக் கண்டு வியந்தேன்” - ராகுல் புகழாரம்

தன் வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் கருணாநிதி என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலை, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து தற்போது சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, “தமிழினத்தின் மாபெரும் தலைவரின் நினைவை போற்ற இங்கு கூடியிருக்கிறோம். மக்களின் குரலாகவே ஒலித்தவர் கருணாநிதி. மக்களின் கஷ்டத்தை தன் கஷ்டமாக நினைத்தவர். மக்களின் மகிழ்ச்சியை தன் மகிழ்ச்சியாக நினைத்தவர். 

மேலும் தன் வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காக அற்பணித்தவர் கருணாநிதி. நான் முதன்முறை கருணாநிதியின் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு அவரின் வீடு மிகப்பெரியதாக இருக்கும், நிறைய பொருட்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சென்றேன். ஆனால் நான் வீட்டிற்குள்ளே சென்ற போது ஆச்சரியம் அடைந்தேன். அவரிடம் இருந்த எளிமையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். 

பலப்பல ஆண்டுகள் அரசியல் தலைவராக உள்ள ஒருவரின் வீடு எளிமையாக இருந்ததைக் கண்டு வியந்து போனேன். கருணாநிதியின் சந்திப்பு எனக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது. என்னை போன்ற இளைஞர்களுக்கு எளிமையை  கற்றுக்கொடுத்த கருணாநிதிக்கு நன்றி. கோடானகோடி மக்களின் எண்ணங்களை மத்திய அரசு மதிக்கவில்லை. அடுத்த  தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கருத்து. இந்தியாவின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை  சீரழிக்க விடமாட்டோம். அடுத்த தேர்தலில் பாஜக தோற்கும்.” என்று பேசினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com