“மும்பையை விட சென்னை பிடித்ததால் இங்கேயே குடியேறுகிறேன்” -  தஹில் ரமானி

“மும்பையை விட சென்னை பிடித்ததால் இங்கேயே குடியேறுகிறேன்” -  தஹில் ரமானி
“மும்பையை விட சென்னை பிடித்ததால் இங்கேயே குடியேறுகிறேன்” -  தஹில் ரமானி

முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானிக்கு மெட்ராஸ் பார் ஆசோசியேசன் சார்பில் சென்னையில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அந்த நிகழ்வில் பேசிய தஹில் ரமானி, “மும்பையில் இருப்பதை விட தமிழகம் பிடித்ததால்தான் சென்னையிலேயே குடியேற விரும்புகிறேன். பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக தலைமை நீதிபதியாக பணியாற்றியது குறித்து பெருமை. குறைந்த காலத்தில் 5000 வழக்குகளை முடித்த திருப்தியாக உள்ளது.

மும்பையை ஒப்பிடும் போது சீதோஷண நிலை, சாலை வசதி, உள்கட்டமைப்பு வசதி என எல்லாவற்றிலும் சென்னை சிறந்து விளங்குகிறது. சென்னையிலேயே குடியுயேற விரும்புவதால்தான், இங்கு நிலம் வாங்கியுள்ளோம். கடந்த ஓராண்டுக்கு மேலான காலத்தில் 5040 வழக்குகள் முடித்து வைத்தது நியாயமாகவே தான் கருதுகிறேன். அதற்கு உறுதுணையாக இருந்த நீதிபதி எம்.துரைசாமிக்கு நன்றி.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு நன்றி. தலைமை நீதிபதியாக இருந்த போதும், இடமாற்ற உத்தரவுக்கு பிறகும் ஆதரவளித்தவர்காலுக்கு நன்றி” என்றார்.

நிகழ்ச்சியில் நீதிபதிகள் மணிக்குமார், கிருபாகரன், எம்.எஸ்.ரமேஷ், ஜெயசந்திரன், தண்டபாணி, பாரதிதாசன், சதீஷ்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com