\
கொரோனா பேரிடரால் ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் அகல விநாயகரை வேண்டுகிறேன்:டிடிவி.தினகரன்

கொரோனா பேரிடரால் ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் அகல விநாயகரை வேண்டுகிறேன்:டிடிவி.தினகரன்

கொரோனா பேரிடரால் ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் அகல விநாயகரை வேண்டுகிறேன்:டிடிவி.தினகரன்
Published on

கொரோனா பேரிடரால் ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் விரைவில் அகன்று நாட்டில் அன்பும், அமைதியும் தழைக்க விநாயகரை வேண்டுகிறேன் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வினைகளைத் தீர்த்து, வெற்றிகளைத் தந்திடும் விநாயகப்பெருமான் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பேரிடரால் ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் விரைவில் அகன்று,உடல் ஆரோக்கியமும், பொருளாதார வளமும்,மகிழ்ச்சியான வாழ்வும் ஒவ்வொருவருக்கும் சாத்தியமாகட்டும். உலகெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்.அதற்கு முழு முதற்கடவுளான விநாயகரின் அருள் துணை நிற்கட்டும் என்று வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com