தமிழ்நாடு
அறம்சார் அரசியலின் சான்றான நல்லக்கண்ணு விரைந்து முழுமையான நலம்பெற விழைகிறேன்- சீமான்
அறம்சார் அரசியலின் சான்றான நல்லக்கண்ணு விரைந்து முழுமையான நலம்பெற விழைகிறேன்- சீமான்
அரசியல் அறத்திற்கு நிகழ்காலச் சான்றாகவும், எளிமையின் வடிவாகவும் திகழும் பெருந்தமிழர் ஐயா நல்லக்கண்ணு விரைந்து முழுமையான நலம்பெற விழைகிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள பதிவில் “ இம்மண்ணின் அரசியல் அறத்திற்கு நிகழ்காலச் சான்றாகவும், எளிமையின் வடிவாகவும் திகழும் பெருந்தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு, உடல்நலம் தேறி வருகிறார் என்ற செய்தி ஆறுதலைத் தருகிறது. ஐயா விரைந்து முழுமையான நலம்பெற விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்