"நானும் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்; யாருக்கும் பக்க விளைவுகள் இல்லை”-ராதாகிருஷ்ணன்

"நானும் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்; யாருக்கும் பக்க விளைவுகள் இல்லை”-ராதாகிருஷ்ணன்

"நானும் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்; யாருக்கும் பக்க விளைவுகள் இல்லை”-ராதாகிருஷ்ணன்
Published on

மருத்துவத்துறை சார்ந்தவர் என்ற அடிப்படையில் தானும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கி இரண்டாம் நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதனை நேரில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆய்வுக்கு பின்னர் தானும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நோய் தடுப்புக்கான முக்கிய மைல்கல் தடுப்பூசி என்றும், இதுவரை 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உட்பட 3,226 மருத்துவ பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மூன்றாவது கட்டமாக 50 வயதுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் எனக்கூறிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்ட எவருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com