"சந்திரமுகியாக நான்தான் நடிக்க வேண்டியது: ஆனால், மிஸ் பண்ணிட்டேன்" - நடிகை சினேகா வருத்தம்

பி.வாசு இயக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்த சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகாவுக்கு பதில் தான்தான் நடிக்க வேண்டியது என்று நடிகை சினேகா வருத்தத்துடன் கூறியுள்ளார்.
jothika  sneha
jothika snehapt desk

ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட நடிகர் பட்டாளமே நடித்து மெகா ஹிட் ஆன சந்திரமுகி திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானது. மலையாள படத்தின் ரீமேக் என்றாலும், அவ்வளவு நேர்த்தியாக தனக்கே உரித்தான பாணியில் இயக்கி அசத்தியிருப்பார் இயக்குனர் பி.வாசு.

jothika
jothikapt desk

குறிப்பாக ஜோதிகா மற்றும் வடிவேலு ஆகியோரின் நடிப்பு, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததோடு அவர்களது நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி கொண்டாடினர். இதையடுத்து இருவரும் கலைமாமணி விருதை பெற்றனர். அதேபோல் இந்தப் படம் திரையரங்குகளில் 890 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகை சினேகா, சந்திரமுகி பாகம் ஒன்றில் நான்தான் சந்திரமுகியாக நடிக்க இருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அது நடக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள், நல்ல வேலை நீங்க நடிக்கல, சந்திரமுகியா நீங்க நடிச்சிருந்தா கங்கனா மாதிரி உங்களையும் கலாய்ச்சிருப்பாங்க என்று சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com