\
விசிக நிர்வாகிக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

விசிக நிர்வாகிக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

விசிக நிர்வாகிக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
Published on

திருச்சி மன்னார்புரத்தில் விசிக நிர்வாகி ராஜாவுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் அவரது நண்பர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான குடோனில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் திருச்சி மன்னார்புரத்தில் விசிக நிர்வாகி ராஜாவுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர் ராஜாவுக்கு எல்பின் என்ற சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். விசிக வர்த்தகப்பிரிவு மாநில நிர்வாகியான ராஜாவின் நிறுவனம் மீது ஏற்கெனவே பொதுமக்கள் மோசடி புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  

நிலம் வாங்கி தருவதில் மோசடி என்ற புகாரில் ஏற்கெனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சோதனையில் இதுவரை பணமோ ஆவணங்களோ கைப்பற்றப்படவில்லை என்றும் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com